Bus | Viral Video | நிற்காமல் சென்ற அரசு பேருந்து - விரட்டி பிடித்து கேள்வி எழுப்பிய பயணி
Bus | Viral Video | நிற்காமல் சென்ற அரசு பேருந்து - விரட்டி பிடித்து கேள்வி எழுப்பிய பயணி #Coimbatore #Bus #ViralVideo கோவையில், பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதாகக் கூறி, பயணி ஒருவர் பேருந்தை விரட்டிப் பிடித்து நடத்துனரிடம் கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேட்டுப்பாளையம் சாலையில் நேற்று இரவு சென்ற அரசு பேருந்து, கவுண்டம்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து மற்றொரு வாகனத்தில் பேருந்தை விரட்டிச் சென்ற பயணி, பேருந்தை வழிமறித்து நடத்துனரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு, பயணி கை காட்டாததால் பேருந்து நிற்கவில்லை என நடத்துனர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அந்தப் பயணி செல்போனில் வீடியோ பதிவு செய்த நிலையில், நடத்துனர் செல்போனை பறித்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பேருந்தில் இருந்த சக பயணிகளும் நடத்துனரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
