திடீரென பயங்கரமாய் தீப்பிடித்து எரிந்த பஸ் - மொத்தமாக கருகிய காட்சி
திடீரென தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து- உயிர் தப்பிய பயணிகள்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே ஓடும் பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயணிகள் அனைவரும் உடனடியாக கீழே இறங்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிக்கப்பட்டது.
72 பயணிகளுடன் நாகர்கோயிலில் இருந்து மதுரைக்கு சென்ற அந்த அரசு பேருந்து, சாத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென எஞ்சினில் இருந்து புகை வெளியேறி உள்ளது. உடனடியாக பேருந்தின் ஓட்டுநர் பயணிகள் அனைவரையும் கீழே இறக்கி விட்டார். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீ பரவி எரியத் தொடங்கியது. தகவல் அறிந்து வந்த சாத்தூர் தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக் கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து வச்சக்காரப்பட்டி காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
