Sivaganga Bus Issue | நிற்காமல் சென்ற அரசுப்பேருந்து - விரட்டி சென்று பெண்கள் செய்த செயலால் பரபரப்பு
நிற்காத அரசுப்பேருந்து - விரட்டி சென்று சிறைபிடித்த பெண் பயணிகள்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நிற்காமல் சென்ற அரசுப்பேருந்தை, ஆட்டோவில் விரட்டி சென்று சிறைபிடித்த பெண் பயணிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
அதிகரை கிராமத்தில் அரசுப்பேருந்து நிற்காமல் சென்ற நிலையில், ஒரு சில பயணிகள் ஓடிப்போய் ஏறியுள்ளனர். அவர்கள், நிறையபேர் காத்திருக்கிறார்கள்... பேருந்தை நிறுத்துங்கள் என்று கூறியும் பேருந்து ஓட்டுநர் சேகர், நிற்காமல் சென்றுள்ளார். இந்நிலையில், பேருந்தை ஆட்டோவில் விரட்டி சென்ற பெண் பயணிகள், பேருந்தை சிறைபிடித்து சுமார் ஒரு மணிநேரம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Next Story
