டூட்டியில் இருக்கும்போதே உயிரை விட்ட அரசு பேருந்து கண்டக்டர்
கடலூர் மாவட்டம் வேப்பூரில் அரசு பேருந்து நடத்துநர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்தில் வந்தவாசியை சேர்ந்த நடத்துநருக்கு தொழுதூர் அருகே நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. மாத்திரை சாப்பிட்ட அவர், வேப்பூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நிறுத்தப்பட்டபோது மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் நடத்துநரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
