

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசு பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில் 2 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த இருவரும் கிருஷ்ணன் கோயில் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மணிகண்டன் மற்றும் மகாராஜன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.