அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழப்பு - தப்பியோடிய பேருந்து ஓட்டுனருக்கு போலீசார் வலை

திருப்பூர் பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப் பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழப்பு - தப்பியோடிய பேருந்து ஓட்டுனருக்கு போலீசார் வலை
Published on

திருப்பூர், பல்லடம் அருகே அரசுப்பேருந்து மோதி 5 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெருந்துறையை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளியான மல்லீஸ்வரன், தனது மனைவி மற்றும் 5 மாத குழந்தையுடன், சாமி கும்பிடி குலதெய்வம் கோவிலுக்கு, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, எதிரே வந்த அரசுப்பேருந்து மோதியதில், குழந்தை யஸ்வந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழக்க, படுகாயம் அடைந்த, தாய் கௌசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, தப்பியோடிய பேருந்தின் ஓட்டுனரை, போலீசார் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com