AC ஓடாத அரசு AC பஸ்.. டென்ஷனாகி கோர்ட்டுக்கு போன பயணி
அரசு பேருந்தில் செயல்படாத ஏசி - 35 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு
அரசு குளிர்சாதன பேருந்தில் ஏசி வேலை செய்யாததால் வழக்கு தொடர்ந்த பயணிக்கு 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடு தர நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை என்.ஜி.ஓ காலனியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் மதுரையில் இருந்து திருநெல்வேலிக்கு அரசு குளிர்சாதன பேருந்தில் பயணம் செய்த போது ஏசி செயல்படாமல் இருந்துள்ளது. கடும் சிரமத்துடன் பயணித்த அவர் நடத்துனர், ஓட்டுனர், பொது மேலாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார். இதற்கு முறையான பதில் கிடைக்காததால் திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கில் 35 ஆயிரம் ரூபாய் இழப்பீடுடன் ஏசி பேருந்து என்பதால் கூடுதலாக பெறப்பட்ட கட்டணம் 37 ரூபாயையும் சேர்த்து வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
