

தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஒரு கோடி ரூபாய்
நிதியுதவி வழங்கியுள்ளார். கிண்டி ஆளுநர் மாளிகையில், முதலமைச்சர் உடனான சந்திப்பின்போது, காசோலையை மு.க. ஸ்டாலினிடம் ஆளுநர் வழங்கினார். இது தொடர்பாக ஆளுநர்
மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த நிதியுதவி
தமிழக அரசின் கொரோனா தடுப்பு மற்றும்
கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு உதவும்
என்று ஆளுநர் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்களும் தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்