மறந்தும் கூட கூகுளில் `இந்த’ வார்த்தைகளை தேடி விடாதீர்கள்.. 7 ஆண்டு ஜெயில் கன்பார்ம்

x

மறந்தும் கூட கூகுளில் `இந்த’ வார்த்தைகளை தேடி விடாதீர்கள்.. 7 ஆண்டு ஜெயில் கன்பார்ம்.. Incognito மோடும் காப்பாற்றாது

இணையத்தில் எப்போதும் எதையாவது தேடிக்கொண்டிருப்பவர்களா நீங்கள்? ஆட்சேபத்திற்குரிய தகவல்களை தேடினால் காவல்துறையினரால் கைது செய்யப்படும் அபாயம் இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் இணையவாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

சமைக்க கற்றுக்கொள்வது முதல் சகலத்திற்கும் இணையத்தை பயன்படுத்தும் பழக்கம் இன்று பெருகிவிட்டது. அறிவியல் தொடங்கி அந்தரங்க தகவல்கள் உட்பட அனைத்தையும் தேடுவதற்கு, அன்றாட வாழ்க்கையில் கூகுளே பிரதான இடம் வகிக்கிறது.

அதே சமயம் வலிக்காமல் தற்கொலை செய்துக்கொள்ளும் வழி? மாட்டிக்கொள்ளாமல் மர்டர் செய்யும் மெத்தேட் என அபத்தமான தகவல்களை தேடி சிக்கிக்கொள்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். இவ்வாறாக இணையத்தில் தேடக்கூடாத 4 சென்சிடிவ் விஷயங்கள் இருக்கின்றன.

வெடிகுண்டு, வெடிமருந்து தயாரிப்பது தொடர்பாக தேடுதல்... துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் செய்வது எப்படி என்பதை பார்த்தல்... குழந்தை ஆபாசப் படங்கள்... தடை செய்யப்பட்ட இணையதளங்கள் மூலம் சட்டவிரோதமாக ஹேக்கிங் கற்றுக்கொள்வது...

புதிய படங்களை டவுன்லோட் செய்தல்... உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் காவல்துறையின் கண்காணிப்பு வளையத்தில் சிக்குவது நிச்சயம் என எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.

குறிப்பாக சிறார் ஆபாச படங்கள் பார்ப்பது, டவுன்லோடு செய்வது பகிர்வது போன்ற செயல்களில் ஈடுபடும் அனைவருக்கும், ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சட்ட நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மறுபுறம், Incognito mode-ஐ பயன்படுத்தினால் நாம் எதைப் பற்றி தேடுகிறோம் என்பதை கண்டுபிடிக்க முடியாது என பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்...

பெண்கள், குழந்தைகளுக்கான இணைய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பெருகி வரும் சூழலில், தினமும் மொபைலில் டேட்டா தீராமல் இருக்கிறதே என்பதற்காக, கண்டதையும் தேடினால் போலீசாரால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கின்றனர் சைபர் நிபுணர்கள்.


Next Story

மேலும் செய்திகள்