சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு பெருமைப் படுத்தியுள்ளது. கூகுள் தேடுபொறி முகப்பில் 11 மொழிகளில் பெண் என்று எழுதப்பட்டுள்ளதுடன், மேரி கோம், யோகோ ஒன் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 சாதனையாளர்களின் பொன்மொழிகளையும் டூடுலாக வெளியிட்டுள்ளது. இந்த ' டூடுல் ' வடிவமைப்பு முழுவதும் பெண்களால் உருவாக்கப்பட்டது என்றும் கூகுள் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.