கொருக்குப்பேட்டையில் தடம் புரண்டது சரக்கு ரயில்...

சென்னை கொருக்குப்பேட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது.
கொருக்குப்பேட்டையில் தடம் புரண்டது சரக்கு ரயில்...
Published on
சென்னை கொருக்குப்பேட்டையில் சரக்கு ரயில் தடம் புரண்டதால், பயணிகள் ரயில் சேவை மூன்று மணி நேரம் பாதிக்கப்பட்டது. சென்னை தண்டையார் பேட்டையில் இருந்து மதுரை சென்ற சரக்கு ரயில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் அருகே தடம் புரண்டது. அதனால் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கத்திலான அனைத்து புறநகர் ரயில்களும் நிறுத்தப்பட்டன. சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், தண்டவாளங்கள் சரி செய்யப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டன.
X

Thanthi TV
www.thanthitv.com