Kovai | கோவையில் சரக்கு ஆட்டோவை சிறைபிடித்த மக்கள் - உள்ளே இருந்த அதிர்ச்சி பொருள்

x

கோவை மாவட்டம் அன்னூர் அருகே, காலாவதியான மருந்து மாத்திரைகளை கொட்டிய வாகனத்தை பொதுமக்கள் சிறைபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். கொண்டையம்பாளையம் ஊராட்சியில் மயானம் அருகே, சரக்கு ஆட்டோவில் கழிவுகளை சிலர் கொட்டியுள்ளனர். இதை பார்த்த அப்பகுதி மக்கள், காலாவதியான மருந்து மாத்திரைகள் இருந்த‌தால், சரக்கு ஆட்டோவை சிறைபிடித்து, காவல்துறை மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் மகேஸ்வரன் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதி ஹரிஹரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, கோவை புறநகர் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் மருந்த‌கங்களுக்கு மருந்துகளில் காலாவதியான மருந்து மாத்திரைகளை சேகரித்து வந்து கொட்டியது தெரிய வந்த‌து. இதையடுத்து, கொட்டப்பட்ட மருந்துகளை அதே வண்டியில் ஏற்றி, ஆட்டோவை பறிமுதல் செய்து காவல்நிலையம் எடுத்துச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்