மத்திய அரசு சொன்ன குட்நியூஸ்... சமையல் எண்ணெய் அதிரடி விலை குறைவு

x

மத்திய அரசின் சுங்கவரி கட்டணத்தை குறைத்ததன் காரணமாக எண்ணெய் விலை குறைந்தது. சமீப காலமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து கொண்டே இருப்பதால் பல பொருட்களும் விலை உயர்வை சந்தித்தன. இது சமையல் எண்ணெயிலும் எதிரொலித்தது. இந்நிலையில், கச்சா பாமாயில், கச்சா சோயாபீன் மற்றும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் ஆகியவை மீதான அடிப்படை சுங்க வரியை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக மத்திய அரசு குறைந்துள்ளது. இதன் மூலம் இறக்குமதி வரி 27.5 சதவீதத்தில் இருந்து 16.5 சதவீதமாக ஆக குறைந்துள்ளது. இதனால், கடந்த வாரம் ஒரு லிட்டர் 135 ரூபாய்க்கு விற்பனை ஆன பாமாயில் எண்ணெய்யின் விலை, 125 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 146 முதல் 155 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய்யின் விலை, 136 முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்