முருகன் கோயிலில் கொலு நிகழ்ச்சி கோலாகலம் - பரவசமான பக்தர்கள்

சென்னை வடபழனி கோயிலில் சக்தி கொலு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்று வருகிறது. நவராத்திரி விழாவையொட்டி, விதவிதமான கொலு வைத்து, காலை மற்றும் மாலையில் சிறப்பு வழிபாடு நடைபெறும் நிலையில், வியாழனன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் உற்சாகத்துடன் கொலுவை பார்த்து ரசித்தனர். நாள்தோறும் காலை 6.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் மக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com