நெல்லை : வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை

நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் மரிய மைக்கேல் வில்சன்.
நெல்லை : வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் நகை கொள்ளை
Published on
நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்தவர் மரிய மைக்கேல் வில்சன். அங்குள்ள இஸ்ரோ மையத்தில் லேப் டெக்னிசியனாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரசவத்திற்காக கன்னியாகுமரியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்ற நிலையில் இன்று காலை திரும்பி வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்த 35 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com