வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்

வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
வளர்ச்சி திட்டங்கள் - குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்
Published on

வளர்ச்சி திட்டங்கள் -குந்தகம் விளைவிப்பதா? ஓபிஎஸ் அறிக்கைக்கு தங்கம் தென்னரசு கடும் கண்டனம்

வளர்ச்சி திட்டங்களுக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிக்கை விட்டிருப்பது கண்டிக்கதக்கது என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் பெட்ரோலியம் மற்றும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டங்கள் மத்திய அரசின் நிறுவனங்களால் கடந்த ஆட்சியிலேயே செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில், எதுவும் அறியாதது போலவும், இந்ததிட்டங்களை புதிதாக செயல்படுத்துவது போலவும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டிருப்பது கண்டத்துக்குரியது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். மேலும், நில உரிமையாளர்களின் ஒத்துழைப்புடன், கூடுதல் இழப்பீடு வழங்கி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com