தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் 750 கிராம் கடத்தல் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
தங்கம் கடத்திய 4 பேரிடம் விசாரணை : 750 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்
Published on

துபாயில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் விமானத்தில் பயணம் செய்தவர்களிடம் , சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, திருச்சியை சேர்ந்த முகமது ரபீக், ஹைதர் கான், முகமது யூனூஸ், அப்துல் ரகீம் ஆகியோர் உள்ளாடைகளில் மறைத்து கடத்தி வந்த 750 கிராம் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 28 லட்சத்து 64 ஆயிரத்து 684 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துபாய் மற்றும் மலேசியாவிற்கு அடிக்கடி சென்று தங்க கடத்தலில் ஈடுபடுபவர்கள் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com