

காலை நிலவரப்படி ஒரு கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்த நிலையில் மீண்டும் மாலையில் 23 ரூபாய் உயர்ந்தது. இதன்படி ஒரு கிராமுக்கு ஒரே நாளில் 67 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 4 ஆயிரத்து 815 ரூபாயாக உள்ளது. இதன்படி ஒரு சவரன் தங்கம் 38 ஆயிரத்து 520 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 2100 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ பார் வெள்ளி 74 ஆயிரத்து 100 ரூபாயாக உள்ளது.