அட்சய திருதியை வித விதமாய் ஆஃபர்களை அள்ளி வீசிய நகைக் கடைகள்
அட்சய திருதியையொட்டி சென்னையில் நகை கடைகளில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தங்கம் கிராமுக்கு 375 ரூபாயும், சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் வரையும் தள்ளுபடி விலையில் விற்கப்பட்டது.. அட்சய திருதியை நாளில் ஆரம்பிக்கும் எந்தவொரு செயலும் பெருகும் என்பது மக்களின் நம்பிக்கை.. இதனால் விற்பனையாளர்கள் காலையிலேயே நகைக்
கடைகளை திறந்து தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பில் ஈடுபட்டனர்..அதில் பல நகைக் கடைகள் அதிரடியான பல சிறப்பு சலுகைகளை அறிவித்தன. அதன்படி வெள்ளி பொருட்களுக்கு கிலோவுக்கு 3 ஆயிரமும், வைர நகைகளுக்கு கேரட்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரையும் தள்ளுபடி வழங்கப்பட்டது... இதனால் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு தங்கம் வாங்க ஆர்வம் காட்டினர்.Jewelry stores offer various offers on Akshaya Tritiya || அட்சய திருதியை வித விதமாய் ஆஃபர்களை அள்ளி வீசிய நகைக் கடைகள்
