கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு

முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார்.
கோகுல இந்திராவின் தந்தை மறைவு : முதலமைச்சர் துக்கம் விசாரிப்பு
Published on
முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவின் தந்தை சுப்பிரமணியன் மறைவையொட்டி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை அண்ணாநகரில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று துக்கம் விசாரித்தார். சமீப காலமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த சுப்பிரமணியன் நேற்று மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்குகள் அண்ணாநகரில் உள்ள கோகுல இந்திரா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. அவரது உடலுக்கு அதிமுகவினரும் பல்வேறு அரசியல் கட்சியினரும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர் தங்கமணி ஆகியோர் கோகுல இந்திராவின் இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com