``வீடு வீடாக சென்று.. உறுப்பினர் சேர்க்கை'' | தி.மு.கவை விமர்சித்த ஈ.பி.எஸ்

x

மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி, கோவை மேட்டுப்பாளையத்தில், வரும் 7ம் தேதி முதல் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ​லோகோவை, சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். பிரச்சார பாடலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, வீடு வீடாக சென்று கதவை தட்டி உறுப்பினர்களை சேர்க்கும் அளவுக்கு தி.மு.க சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

கூட்டணி குறித்தும், முதல்வர் வேட்பாளர் குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக கூறிவிட்டதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்