மீனவருக்கு கடலுக்குள் காட்சி கொடுத்த காளி.. குமரியில் அதிசயம்
மீனவர் வலையில் சிக்கிய காளி சிலை - வட்டாச்சியரிடம் ஒப்படைப்பு
கன்னியாகுமரி அருகே மீனவர் வலையில் காளி தேவியின் உலோக சிலை சிக்கிய சுவாரசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே மண்டைக்காடு புதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த ஜேசுமரியான் என்பவர் குளச்சல் துறைமுக பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது மீன்பிடி வலையில் 1 அடி உயரமுடைய உலோகத்தாலான அம்மன் சிலை சிக்கியது. வலையில் சிக்கிய சிலையை தனது மனைவியின் உதவியுடன் மண்டைகக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஜேசுமரியான் ஒப்படைத்துள்ளார். சிலையை பெற்றுகொண்ட கோவில் மேலாளர் கல்குளம் வட்டாச்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
Next Story
