Goat Theft | "அட ஆட்டுக்கு செத்தவங்களா.. வண்டி உங்களதா வாடகை எடுத்ததா" வைரலாகும் வீடியோ
ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் 13 ஆடுகள் அடுத்தடுத்து திருடு போய் உள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி கிராமத்தை சேர்ந்த ரமேஷ் எனும் விவசாயி ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். வழக்கம்போல தனது ஆடுகளை கொட்டகையில் கட்டிவிட்டு தூங்க சென்றுள்ளார்.
இந்நிலையில் நள்ளிரவில் காரில் வந்த மர்ம நபர்கள் 9 ஆடுகளை திருடி சென்றுள்ளனர். இதேபோல பொன்னேரி பகுதியிலும் 4 ஆடுகள் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story
