``போ குவார்ட்டரும், பிரியாணியும் வாங்கிட்டு வா'' ஸ்டேஷனில் போக்ஸோ அக்யுஸ்ட் அட்ராசிட்டி
விருத்தாச்சலம் அருகே, மூதாட்டியை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர், போலீசாரிடம் குவாட்டரும் பிரியாணியும் வாங்கித்தர சொல்லி அட்டகாசம் செய்துள்ளார். மூதாட்டி ஒருவரை தாக்கியதற்காக, சி.கீனனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியை திருமணம் செய்துகொண்டதற்காக, ஏற்கெனவே இவர் மீது போக்சோ வழக்கும் நிலுவையில் இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், காவல்நிலையத்தில், குவாட்டரும் பிரியாணியும் வேண்டும் எனக்கூறி போலீசாரிடம் வாக்குவாதம் செய்த அய்யப்பன், எப்படியும் இரவு முழுக்க வைத்து அடிக்கதானே போறீங்க என அலப்பறை செய்தார்.
Next Story
