"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது.
"கழிவுநீர் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.2,371 கோடி" - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
Published on
சென்னை மாநகரில், கழிவுநீர் உட்கட்டமைப்பை மேம்படுத்த, 2 ஆயிரத்து 371 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை, பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு 2019 ஆம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நீரோடைகளில் கழிவுநீர் கலப்பதை இடைமறிப்பது, மாற்று வழிகள் அமைப்பது, புனரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com