3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு - விழுப்புரம் அருகே பரபரப்பு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, நள்ளிரவில் 3 அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில், பா.ம.க பிரமுகர் கைது செய்யப்பட்டார். நாட்டார்மங்கலம் மற்றும் வல்லம் பகுதிகளில், அடுத்தடுத்து 3 அரசுப் பேருந்துகள் மற்றும் லாரியின் கண்ணாடியை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், பாட்டில்களை கொண்டு அடித்து உடைத்துவிட்டு தப்பியோடினார். இதில் அரசுப் பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் காயமடைந்தார். என்.எல்.சி. நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் கண்ணாடி உடைக்கப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக வல்லம் பகுதியை சேர்ந்த பா.ம.க பிரமுகர் அறிவழகனை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com