செம VIBEல் மாணவிகள் - ஆட்டம், பாட்டத்துடன் களை கட்டிய ஓணம்
ராஜபாளையத்தில் மாணவ மாணவிகளின் உற்சாக நடனத்துடன் ஓணம் கொண்டாட்டம் களை கட்டியது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மொட்டை மலையில் செயல்படும் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு முதல் முறையாக ஓணம் கொண்டாட்டம் நடைபெற்ற நிலையில் கேரள பாரம்பரிய உடை அணிந்து, மகாபலி சக்கரவர்த்தி உருவப்படத்திற்கு முன் ஓணம் வாழ்த்துக்களை முழக்கமிட்டும், பாரம்பரிய அத்தப்பூ கோலமிட்டும், மலையாள பாடல்களுக்கு நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் கிராமிய விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றன.
Next Story
