உரிமம் பெறாமல் மகளிர் விடுதி : 2 ஆண்டு சிறை - தமிழக அரசு அதிரடி

சென்னையில் உரிமம் பெறாமல் மகளிர் விடுதிகள், சிறார் இல்லங்களை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமம் பெறாமல் மகளிர் விடுதி : 2 ஆண்டு சிறை - தமிழக அரசு அதிரடி
Published on
சென்னையில் உரிமம் பெறாமல் மகளிர் விடுதிகள், சிறார் இல்லங்களை நடத்தினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை ஆதம்பாக்கம் சம்பவத்தை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி, 50க்கும் மேற்பட்டோர் இருக்கும் இல்லங்களின் வாசல்களில் கண்காணிப்பு கேமராக்கள், டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் பொருத்தப்பட வேண்டும் எனவும், விடுமுறை நாட்களில் ஊருக்கு செல்லும் போது பெற்றோர் மற்றும் பாதுகாவலருடன் மட்டுமே பெண்கள் மற்றும் குழந்தைகளை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய அனுமதி பெறாமல் இயங்கும் விடுதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் எச்சரித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com