Girls Missing | மரத்தை பிடித்து இறங்கி மாடியில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் - திடுக் தகவல்

மரத்தை பிடித்து இறங்கி மாடியில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் - திடுக் தகவ

Girls Missing | மரத்தை பிடித்து இறங்கி மாடியில் இருந்து தப்பி ஓடிய சிறுமிகள் - திடுக் தகவல்

#chennai #girl #missing

சென்னை புழல் அடுத்த கதிர்வேடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் சிறுமிகள் காப்பகத்தில் இருந்து, 14 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் தப்பிச் சென்றுள்ளனர். மூளை வளர்ச்சிக் குறைபாடுடைய மற்றும் பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் உட்பட 36 பேர் தங்கியுள்ள இந்தக் காப்பகத்தில், விழுப்புரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த 2 சிறுமிகள் கடந்த 21-ஆம் தேதி இரவு முதல் மாடியில் உள்ள மரம் வழியாக இறங்கித் தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறுமிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com