காதலியின் பெற்றோர் மிரட்டல்? - இளைஞர் தற்கொலை - உறவினர்கள் மறியல்

x

காதலியின் பெற்றோர் மிரட்டல்? - இளைஞர் தற்கொலை - உறவினர்கள் மறியல்

தென்காசி மாவட்டம் ஊத்துமலையில் காதலியின் உறவினர்கள் மிரட்டியதாக கூறி, இளைஞர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஜேஜே நகரை சேர்ந்த பால் வியாபாரியான

மதன், அதே ஊரை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை ஐந்து வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. பெண்ணின் பெற்றோர் காதலுக்கும் மறுப்பு தெரிவித்ததோடு, மதனை அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மதன் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து, மத‌னின் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்