டியூசன் சென்ற சிறுமி... செய்த அசிங்கத்தால் வசமாக சிக்கிய ஆசிரியர்

x

டியூசன் சென்ற சிறுமி... செய்த அசிங்கத்தால் வசமாக சிக்கிய ஆசிரியர்

கன்னியாகுமரியில்13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமாரி கருங்கல் பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் அதே பகுதியில் டியூஷன் மையம் நடத்தி வருகிறார். அங்கு டியூஷன் சென்ற 13 வயது சிறுமியான 7ம் வகுப்பு மாணவிக்கு மகேஷ் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் அண்ணன் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி விசாரணை மேற்கொண்ட மகளிர் போலீசார் டியூசன் ஆசிரியர் மகேஷ் மீது போக்சோ உள்பட 5 பிரிவில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்