தஞ்சை அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - காதலித்து விட்டு ஏமாற்றியதால் மனமுடைந்து முடிவு

தஞ்சை அருகே காதலித்த தன்னை விட்டு விட்டு காதலன் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் மனமுடைந்த காதலி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தஞ்சை அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை - காதலித்து விட்டு ஏமாற்றியதால் மனமுடைந்து முடிவு
Published on
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா சோழகன்காடு கிராமத்தை சேர்ந்தவர் புகழரசன். இவர் அதே ஊரை சேர்ந்த அருணா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். புகழரசன் வெளிநாட்டுக்கு சென்ற நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனிடையே சொந்த ஊருக்கு வந்த புகழரசனுக்கு வேறொரு பெண்ணுடன் அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணமான புகைப்படத்தை புகழரசன் தன் முன்னாள் காதலி அருணாவுக்கு அனுப்பியுள்ளார். இதைப் பார்த்து விரக்தியடைந்த அருணா, தன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தன்னுடைய மரணத்துக்கு காரணம் புகழரசன் தான் என எழுதி வைத்துவிட்டு அவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அருணாவின் உறவினர்கள் பெண்ணின் சடலத்தை எடுத்துக் கொண்டு புகழரசன் வீட்டின் முன் போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. புகழரசன் மற்றும் அவரது மனைவி சாந்தியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com