காவல்நிலைய மாடியில் இருந்து குதித்த சிறுமி - 2 கால்களும் முறிவு

x
  • நெல்லை மாவட்டம் சேரன் மகாதேவி அருகே விசாரணையில் இருந்த சிறுமி தற்கொலைக்கு முயற்சித்த நிலையில்,
  • இரு கால் முட்டுகளும் உடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • 15 வயதுடைய சிறுமி ஒருவர் 38 வயதுடைய ஆண் ஒருவருடன் இணைந்து சென்றதாக காவல்நிலையத்தில் புகார் பதியப்பட்டது.
  • இதனை தொடர்ந்து இருவரும் கண்டுபிடிக்கப்பட்டு, மகளிர் காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டனர்.
  • அப்போது சிறுமியின் நடத்தை காரணமாக, அவரது தாயார் வீட்டிற்கு அழைக்க மறுத்து, காப்பகத்தில் வைக்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது.
  • இதனால் மனமுடைந்த சிறுமி காவல்நிலையத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார்.
  • இதில் அவரது இரு கால்களும் முறிந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
  • மேலும், சிறுமியை அழைத்துச் சென்ற ஆண் மீது, போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்