கடத்தல்காரர் சிகரெட் பிடித்த கேப்பில் எஸ்கேப்பான சிறுமி - முக்கிய திருப்பமாக ஒருவரை பிடித்த போலீஸ்

கடத்தல்காரர் சிகரெட் பிடித்த கேப்பில் எஸ்கேப்பான சிறுமி - முக்கிய திருப்பமாக ஒருவரை பிடித்த போலீஸ்

#guduvancherychildmissing #childmissingcase சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, காரில் இருந்த 12 வயது சிறுமி காருடன் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் கமுதியைச் சேர்ந்த மலையரசன், குடும்பத்துடன் காரில் வீடு திரும்பியபோது, வல்லாஞ்சேரி பகுதியில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது காரில் தனியாக இருந்த அவரது மகள் ரிஷிகாவை, மர்ம நபர் காருடன் கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்த நிலையில், அதிகாலை 4.30 மணியளவில் சீர்காழி அருகே சிறுமி மீட்கப்பட்டார். கடத்தல்காரர் சிகரெட் பிடிக்க காரை நிறுத்தியபோது சிறுமி இறங்கி ஆட்டோ ஓட்டுநர்களிடம் உதவி கோரியுள்ளார். அவர்கள் சிறுமியை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதற்கிடையே, சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X