Gingee | Road Accident | செஞ்சியில் சாலை விரிவாக்க பணி - தடுப்பு சுவரில் மோதிய கார்
Gingee | Road Accident | செஞ்சியில் சாலை விரிவாக்க பணி - தடுப்பு சுவரில் மோதிய கார் #Gingee #RoadAccident #CCTV #ViralVideo விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, சாலை விரிவாக்கப் பணிக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது... செஞ்சி–மட்டப்பாறை இடையேயான சாலையில் 4 வழிச்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையின் நடுவே தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், சில இடங்களில் பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் போதிய மின் விளக்குகள் இல்லை என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர். நேற்று கனமழை பெய்தபோது, சாலை நடுவே இருந்த தடுப்பு சுவர் தெரியாமல் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. மேலும், நள்ளிரவில் அரசு பேருந்தும் தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. சாலைப் பணிகள் நடைபெறும் பகுதிகளில் இரவு நேர பாதுகாப்பை அதிகரித்து, மின் விளக்குகள், பிரதிபலிப்பு ஸ்டிக்கர்கள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
