பொது வேலைநிறுத்தம் - நாளை எவை இயங்கும்..? எவை இயங்காது..?

x

நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் நாளைய தினம் அதாவது ஜூலை 9 பொது வேலை நிறுத்தம் அறிவிச்சிருக்கர நிலையில மக்களோட இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அபாயம் உருவாகிருக்கு.

பொதுத்துறை நிறுவனங்கள தனியார்மயமாக்கரத நிறுத்தனும், புது ஓய்வூதிய திட்டத்த கைவிடனும், ஒப்பந்த தொழிலாளர்கள நிரந்தரம் செய்யனும்,குறைந்தபட்ச ஊதியௌயர்வ அதிகரிக்கனும்னு சுமார் 17 அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி நடத்தப்படுது இந்த பொதுவேலைநிறுத்தம்

தமிழ்நாட்ட பொறுத்தவரைக்கும் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு திமுகவோட தொழிற்சங்கமான தொ.மு.ச,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியோட தொழிற்சங்கமான சிஐடியு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி காங்கிரஸ்,மதிமுக,விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள சேர்ந்த தொழிற்சங்கங்கள் உட்பட 13 தொழிற்சங்கங்கள் இந்த பொதுவேலைநிறுத்தத்துக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க.

அரசு ஊழியர் சங்கங்களோட இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்துல சுமார் 25 கோடி பேர் கலந்துப்பாங்கன்னு சொல்லப்படர நிலையில தமிழகத்த பொறுத்தவரைக்கும் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாவும் எதிர்பார்க்கப்படுது

திமுகவோட தொழிற்சங்கமான தொமுச இந்த வேலை நிறுத்தத்தில பங்கேற்கரதுனால சென்னை உட்பட தமிழகம் முழுமைக்கும் பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாதுன்னு சொல்லப்படுது. அதுமட்டும் இல்லாம அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்தத்துல கலந்துக்காததுநால குறைந்த அளவிலான பேருந்துகள் இயக்க வாய்ப்பிருப்பதாவும் சொல்லப்படுது. அதே சமயம் சிஐடியுல பெரும்பாலான அட்டோ தொழிலாளர்கள் அங்கம் வகிக்கராங்க. அதனால நாளைய தினம் ஆட்டோக்கள் ஓடுரதுக்கான வாய்ப்புகளும் இல்லன்னு தான் சொல்லப்படுது.

அதே போல தமிழ்நாட்ட பொறுத்தவரியில வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில ஆதரவு தெரிவிக்கல. அதனால கடைகள் வணிக நிறுவனங்கள் வழக்கம்போல செயல்படும்னு சொல்லப்படுது. ஆனா வங்கித்துறை,காப்பீட்டுத்துறை இந்த வேலைநிருத்தத்துல இணையுறதா தெரிவிச்சிருக்கர நிலையில வங்கி பணிகள்,தபால்துரை பணிகள்,அரசு அலுவலக செயல்பாடுகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகும்னு தெரிவிக்கப்பட்டிருக்கு. அதே சமயம் பள்ளி,கல்லூரிகள்,தனியார் நிறுவனங்கள் வழக்கம் போல செயல்படும்னு அறிவிக்கப்பட்டுருக்கு.


Next Story

மேலும் செய்திகள்