மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பரிசுகளை வெல்லுங்க..!

மாணவர்களே மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.10 லட்சம் பரிசுகளை வெல்லுங்க..!
Published on

"அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"

தமிழ்நாடு முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான ஒரு Innovation போட்டிதான் "அடுத்த ஜி.டி. நாயுடு யார்?"

இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு வரலாற்றுப் படமான ஜி.டி.என் படம் மாதவன் நடிப்பில் வெளியாக இருக்கிறது. அதற்காக ஜி.டி.என் படக் குழு, தந்தி குழுமத்துடன் இணைந்து இந்தப் போட்டியை நடத்துகிறது. இதற்கான பதிவு 2026 ஜூன் 11-ம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. ஜூலை 3-ம் தேதி சென்னையில் இதன் இறுதிப் போட்டி நடைபெறும்.

இந்தப் போட்டியில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?

AICTE அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவர்கள் அனைவரும் இந்த போட்டியில் பங்கேற்கலாம்.

போட்டி எப்படி நடக்கும்?

1. உள்நாட்டு உற்பத்தி

2. சிறு விவசாயிகளுக்கான வேளாண் தொழில்நுட்பம்

3. நீர் மற்றும் சுகாதாரம்

4. மலிவு விலை போக்குவரத்து

5. கிராமப்புற இந்தியாவுக்கான சிக்கனமான பொறியியல் தீர்வுகள்

இப்படி நிஜ உலகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய கண்டுபிடிப்புகளை மாணவர்கள் உருவாக்க வேண்டும்.

எத்தனை பேர் சேர்ந்து பங்கேற்கலாம்?

வழிகாட்டியாக ஒரு பேராசிரியருடன் அதிகபட்சம் நான்கு மாணவர்கள் கொண்ட குழுக்களாக இதில் பங்கேற்கலாம்.

பரிசுத் தொகை எவ்வளவு?

மொத்த பரிசுத் தொகை ₹10 லட்சம்.

முதல் பரிசு - ₹5 லட்சம்

இரண்டாம் பரிசு - ₹3 லட்சம்

மூன்றாவது பரிசு - ₹1,25,000

நான்காவது பரிசு - ₹ 50,000,

ஐந்தாவது பரிசு - ₹25,000

இது போக இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் 24 அணிகளுக்கும் முன்னணி நிறுவனத்தில் Incubation Training வாய்ப்பு வழங்கப்படும்.

பதிவு செய்வது எப்படி?

போட்டியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம்.

REGISTER NOW..!

பதிவு செய்ய இறுதி நாள் ஜூன் 21

X

Thanthi TV
www.thanthitv.com