சர்ச்சிலேயே `கை வைத்த’ கயவன்.. அதிர்ச்சி வீடியோ ரிலீஸ்

x

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் தேவாலயாத்திற்கு வந்தவர்களின் செல்போன் உள்ளிட்டவை அடங்கிய பேக்குகளை மர்மநபர் ஒருவர், திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சி.எஸ்.ஐ தேவாலயத்திற்கு ஜெபம் செய்வதற்காக வந்திருந்த அதே பகுதியை சேர்ந்த செயின்ட் லில்லி ராஜாத்தி என்பவரின் பேக்கை மர்ம நபர், நோட்டமிட்டு நைசாக திருடிய காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகின. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தண்டையார்பேட்டை போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்