போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டி கவின்கேர் நிறுவனம் பரிசு

x

சென்னை போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டும் வகையில் கவின்கேர் நிறுவனம் சார்பில், "கவின்ஸ் சியர்ஸ் ட்ராபிக் ஹீரோ" என்னும் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஐடிசி போலீஸ் ஜங்சனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ,கவின் கேர் நிறுவனத்தின் பெவரேஜ் பிரிவு வணிக தலைவர், கே.ஜி. மல்லிகேஸ்வரன், போக்குவரத்து காவலர்களின் சேவையை பாராட்டி உரையாற்றினார். மேலும், கவின் கேர் நிறுவனத்தின் சார்பாக போக்குவரத்து காவலர்களுக்கு கவின்ஸ் பாதாம் பால் பாட்டில்கள் மற்றும் சாலை வழி பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் 10 பேரிகாடுகளும் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்