கேஸ் கசிவு.. தீப்பிடித்த சிலிண்டர்சாதுர்யமாக யோசித்து பெரும் விபரீதத்தை தடுத்த நபர்
வாணியம்பாடி அருகே டிஃபன் கடையில் கேஸ் சிலிண்டர் கசிவால், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, பஷீராபாத் பகுதியில் உள்ள அஃப்ரோஸ் என்பவரது டிஃபன் கடையில் அடுப்பை பற்ற வைத்து உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே ஈரமான கோணி பையை பயன்படுத்தி சாதுர்யமாக கடை ஊழியர் தீயை அணைத்தார்.
Next Story
