Gas Leak | Accident | பால் காய்ச்சிய போது கேஸ் கசிவால் தீ விபத்து - தந்தை மகன் படுகாயம்
செங்கல்பட்டு அருகே வீட்டில் இருந்த சிலிண்டர் கசிந்து ஏற்பட்ட தீ விபத்தில் தந்தை மற்றும் 2 வயது குழந்தை தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காட்டாங்குளத்தூர் பகுதியைச் சேர்ந்த பாரதி என்பவர் தனது மனைவி வீட்டில் இல்லாததால், தனது மகனுக்கு பால் காய்ச்ச அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தந்தை மகன் இருவரும் 40 சதவீத தீ காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story
