வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்.. மாணவிக்கு நேர்ந்த சோகம்.. தருமபுரியில் பரபரப்பு

x

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மோட்டுப்பட்டி கிராமத்தில் சிலிண்டர் வெடித்து கல்லூரி மாணவி படுகாயமடைந்துள்ளார். ரவி - மலர் தம்பதியின் 2வது மகள் கலையரசி அரசுக்கல்லூரியில் படித்து வருகிறார். அவர், வீட்டில் சமைத்து விட்டு சிலிண்டரின் ரெகுலேட்டரை ஆஃப் செய்யாமல் தூங்கச் சென்றதாக தெரிகிறது. எரிவாயு பரவி திடீரென சிலிண்டர் வெடித்த‌தால் கலையரசி படுகாயமடைந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது வீடும், அருகில் உள்ள வீடும் சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்