திடீரென தீப்பற்றி எரிந்த கேஸ் சிலிண்டர் - வீட்டை விட்டு தலைதெறிக்க ஓடிய குடும்பம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே வீட்டில் கேஸ் சிலிண்டர் திடீரென தீ பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோபுராபுரம் கிராமத்தில் ராமலிங்கம் என்பவரின் மனைவி சுகந்தி, வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது கேஸ் சிலிண்டர் திடீரென தீப்பிடித்தது. இதனால் வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் வெளியேறிய நிலையில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், கேஸ் சிலிண்டரை வெளியே எடுத்து தீயை அணைத்தனர்.
Next Story