பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய கேஸ் சிலிண்டர்.. ஒரே நேரத்தில் அடுத்தடுத்த அதிர்ச்சி
கடைகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் வெடித்து விபத்து
சென்னை காசிமேடு கடற்கரை பகுதியில் டிபன் கடை, டீக்கடை என 2 கடைகளில் இருந்த கேஸ் சிலிண்டர்கள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சவர்ணம் என்பவரின் டிபன் கடையில் இருந்து திடீரென்று கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறி தீப்பிடித்தது. இதை அடுத்து, இவரது கடைக்கு அருகில் இருந்த டீக்கடையில் இருந்த சிலிண்டரும் பயங்கரமான சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் தீயை போராடி அணைத்தனர். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக உயிர் பலி ஏதுவும் ஏற்படவில்லை எனத் தெரியவருகிறது.
Next Story
