சிலிண்டர் வெடித்து மேற்குவங்க தம்பதி உயிரிழப்பு : சிகிச்சை பெற சென்னை வந்தபோது விபரீதம்

சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில், மேற்குவங்கத்தை சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்தனர்.
சிலிண்டர் வெடித்து மேற்குவங்க தம்பதி உயிரிழப்பு : சிகிச்சை பெற சென்னை வந்தபோது விபரீதம்
Published on
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த சுனில் சர்தார். இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக, மனைவி கிருஷ்ண சர்தாருடன் நேற்று காலை சென்னை வந்துள்ளர். சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டியிருந்தால், கிரீம்ஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருவரும் வீடெடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், காலை 6 மணியளவில் கிருஷ்ண சர்தார் சமைப்பதற்காக சிலிண்டரை பற்ற வைத்துபோது, எதிர்பாராத விதமாக சிலிண்டர் பெரும் சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் தம்பதியினர் இருவரும் தீக்காயமடைந்த நிலையில், அருகாமையில் இருந்தவர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி தம்பதியினர் இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து ஆயிரம் விளக்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com