சிலிண்டர் விநியோக பணியாளர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை கண்காணிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பொதுநல வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதிகள் சத்யநாராயணன், புஷ்பா சத்யநாராயணா அமர்வு இந்த அறிவுறுத்தலை வழங்கி உள்ளனர்.