Tirupur | Tvk Protest | குப்பையை கொட்ட எதிர்ப்பு - லாரிகளை சிறைபிடித்த தவெகவினர்
திருப்பூரில் சேகரிக்கப்படும் குப்பைகளை, நெருப்பெரிச்சல் பகுதியில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த தவெகவினர், மாநகராட்சியின் 10 குப்பை லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பகுதியில் குப்பை கொட்டுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சூழலில், தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் பாலமுருகன் தலைமையிலான அக்கட்சியினரும், பொதுமக்களும் இணைந்து, குப்பையைக் கொட்ட வந்த லாரிகளை சிறை பிடித்து லாரிகளின் முன்பு அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து, திருத்துறைப்பூண்டி போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது
Next Story