கஞ்சா போதையில் அட்டூழியம்.. தந்தி செய்தி எதிரொலி தட்டி தூக்கிய போலீஸ்
சிதம்பரத்தில், பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கிய கஞ்சா ஆசாமிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள துணிசிரமேடு, பகுதியில் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இந்த நிலையில் சுந்தர் மற்றும் ராஜேஸ் ஆகிய இரண்டு இளைஞர்கள் கஞ்சா போதையில் பெட்ரோல் பங்க் ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். இது தொடர்பான செய்திகள் தந்தி டிவியில் ஒளிபரப்பான நிலையில், தற்போது கஞ்சா போதை ஆசாமிகள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
