ரயில் மூலம் கஞ்சா கடத்தல் | அதிரடியாக கைது செய்த கடலூர் போலீசார்

x

ரயிலில் கஞ்சா கடத்தல் – கடலூர் போலீசாரின் அதிரடி கைது

ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, கடலூரில் விற்பனை செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வரும் இந்த கும்பல், போலீசாரிடம் சிக்காமல் இருக்க, ரயிலில் இருந்து கஞ்சாவை ஓரிடத்தில் வீசிவிட்டு பின்னர் அதனை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளனர். இந்த தகவலின் படி, ஆந்திரா மற்றும் புதுச்சேரி பகுதியில் பதுங்கி இருந்த 6 பேரை கடலூர் தனிப்படை போலீசார் கைது செய்து 21 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்