Sivagangai | பைக்கில் வந்து அரிவாளுடன் இறங்கிய கும்பல் - சரமாரியாக தாக்குதல்.. பகீர் சம்பவம்

சிவகங்கை: அரிவாளுடன் வந்த கும்பல் தாக்குதல் - பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்

#Sivagangai | #Drunk | #Attack | #CCTV | #ThanthiTV Sivagangai | பைக்கில் வந்து அரிவாளுடன் இறங்கிய கும்பல் - சரமாரியாக தாக்குதல்.. சிவகங்கையில் பகீர் சம்பவம் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூர் பகுதியில் அரிவாளுடன் வாகனங்களில் வந்த கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.. முத்தநேந்தல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்தியபோது, இடைக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் பாண்டியராஜன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் மகேஷ் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கிராமத்துக்குள் வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களை வழிமறித்து கேட்ட ராசு என்பவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதில், தடுக்க முயன்ற மேலும் மூவரும் காயமடைந்துள்ளனர். இதையடுத்து ராசு அளித்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com